பூதிஇருக்குவேளிர்

கொடும்பாளுர் மன்னர்களான  வேளிர் மரபினர்   கள்ளர் குலத்தின்
பட்டங்களுக்கு உரியவர்கள்ஆவர்கள்
THANKS TO.(http://kallarperavai.weebly.com/296529953021299529923021-296530092994-298629753021297529693021296529953021.html)


புதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை  மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர். சோழ சரித்திரத்தின் புகழ் பெற்ற ஊர் .கொடும்பாளுரில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இங்கே இரண்டு முக்கிய கோவில்கள் உள்ளன. வேளிர் மரபின் மிச்சமாக உள்ள மூவர் கோவில் அதில் ஒன்று. மற்றது முசுகுந்தேஸ்வரர் கோவில். இரண்டுமே அதன் கலை எழிலுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தமிழகத்தில் அதிகமான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன.குறிப்பாக திருமயம் கோட்டை ,குடுமியான்மலை. நார்த்தா மலை சமண படுகைகள், சித்தன்னவாசல் குகை ஒவியங்கள், சோழர் கால கோவில்களான திருக்கட்டளை,கலியபட்டி.குன்னாந்தார் கோவில், ஆதனக்கோட்டை. கீழாநிலை, மலையடிபட்டி, திருவரங்குளம், சமணர்களை கழுவேற்றம் செய்த ஒவியங்கள் உள்ள ஆவுடையார் கோவில், என்று காலத்தின் அரிய காட்சிக் கூடமாக கண்முன்னே நிற்கின்றன. 

கொடும்பாளுர் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது.கோவிலன் கண்ணகியோடு மதுரைக்கு நடந்து செல்லும் வழியில் கொடும்பை என்ற இடத்தைக் கடந்து போனதாக பாடல் குறிப்பிடுகிறது.ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியை வேளிர்மன்னர்கள் ஆட்சி செய்ததாக  சான்றுகள் கூறுகின்றன. நாயன்மார்களில் ஒருவரான இடங்கழிநாயனார் கொடும்பாளுரைச் சேர்ந்தவரே.


குறுநில மன்னர்களாக அறியப்பட்ட வேளிர் மரபினரைப் பற்றி அதிகமான சரித்திர குறிப்புகள் இல்லை. சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். பாண்டியர்களுடன் சண்டையிட்டுள்ளனர் என்பது போன்ற வெளிப்படையான சரித்திரச் சான்றுகளைத் தவிர அவர்களின் நுண்கலைகள் பற்றியோ, வேளிர் மரபின் தனித்துவம் பற்றியே அதிகம் இன்றும் அறியப்படவில்லை. 

பூதி இருக்கு வேளிர் என்ற மன்னரால் கட்டப்பட்ட மூவர் கோவில் தனித்துவமான அழகுடையது.இருக்கு வேளிர் மன்னர்கள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. தன்னுடைய இரண்டு மனைவிகளான வரகுணவதி மற்றும் கற்றலைபிராட்டியார் விருப்பத்திற்கு ஏற்ப இந்தக் கோவில்களை உருவாக்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

இருக்குவேளிர் மன்னர் சுந்தர சோழனின் காலத்தை சேர்ந்தவர் என்று சில வரலாற்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். சிலர் முதலாம் ஆதித்ய சோழன் காலத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களின் கட்டிடகலை மரபானது சோழர்களின் ஆரம்ப கால கற்றளிகளின் வடிவத்தையே நெருக்கமாக கொண்டிருக்கிறது.

THANKS TO http://www.sramakrishnan.com/?p=381

2 comments:

Anonymous said...

‘‘வேளிர்குலத்து அரசளித்து” என்று சேக்கிழார் கூறுவதன் பொருள் என்ன, கோனாட்டின் தலைநகரான கொடும்பாளூரிலிருக்கும் வேளிர் குலத்தவர்க்கு அரசுரிமை அளித்தவர் இடங்கழியார் என்றோ, வேளிர் குலத்தவர் சார்பான அரசாட்சி செய்தவர் என்றோ இதற்குப் பொருள் கொள்ளலாம். கி.பி.20 ஆம் நூற்றாண்டில் கொம்பாளூர் இருங்கோவேளிர் மரபினர், சோழ அரச குலத்தவருடன் நெருங்கிய மண உறவு கொண்டிருந்தனர் என்பது கொடும்பாளூர் மூவர் கோயிற் கல்வெட்டுகளால் தெரியவருகிறது. அனுபமா (ஒப்பிலாள்) என்ற பெயருடைய சோழ இளவரசி, சமராபிராமன் என்ற யது குல அரசனை மணந்து யது வம்சக் குலக்கொடி ஆயினாள் என்றும் அவர்களுக்கு மின்னாமளா (மின்னா மழை) என்ற பெயருடைய பூதிவிக்ரம கேசரி பிறந்தானென்னும் அவனே இக்கோயிலைக் கட்டுவித்தான் என்றும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.3
வேளிர் குலத்தவரை குறிப்பாக இருங்கோவேள் மரபினரை – யது (யாதவ) வம்சத்தார் எனக் குறிப்பிடுவது புறநானூற்றுப் பாடலில் (பா.201) பதிவாகியுள்ளது. இவர்கள் துவாரகையிலிருந்து அகத்தியருடன் தென்னாட்டு வந்தடைந்தவர்கள் எனத் தொல்காப்பியப் பாயிர உரையிலும், தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பா 32க்கான உரையிலும் நச்சினார்க்கினியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.4 எனவே கொடும்பாளூர்க் கல்வெட்டு குறிப்பிடும் புராண மரபு, புதிதாக உருவாக்கிக் கொள்ளப்பட்ட மரபன்று. இத்தகைய பழமையான மரபினருடன் சோழர் குலத்தவர் மண உறவு கொள்வதும், அம்மரபினர் சார்பாக ஆட்சி செய்வதும் புரிந்துகொள்ளத்தக்கனவே.

4. “மலையமாதவன் துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் குடிவேளிருள்ளிட்டாரையும்… கொண்டு போந்து…” “மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருள், கொணர்ந்த பதினெண் வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது” – நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை. இது குறித்த விவாதத்திற்குப் பார்க்க: “”Velir- were they the Velalar?” – article by Nellai Nedumaran and S.Ramachandran, in the Journal of the Epigraphical Society of India – vol XXIV Mysore, 1999.

17 சோழர் அரசியலில் வேளாளர் குலத்தவரின் பங்களிப்பு அதிகரித்ததன் விளைவாகச் சித்திர மேழிப் பெரிய நாட்டாரின் அரசியல் வலிமையும் பெருகிற்று. வேள், அரசு, காவிதி போன்ற பட்டங்கள் பெரிய நாட்டாரைச் சார்ந்த பல்வேறு சாதியினரின் பரம்பரைப் பட்டங்களாயின. இந்நிலை முற்றியதன் விளைவாகவே பணி மக்கள் இப்பட்டங்களைப் புனைந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் அரசாணை வெளியிடநேர்ந்தது.

17. இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் (கி.பி.1163 – 1178) பட்டத்தரசி, உலகுடை முக்கோக்கிழானடிகள், யாதவ மரபினள் எனக் ‘‘கடல் சூழ்ந்த பாரேழும்” எனத் தொடங்கும் மெய்க் கீர்த்தியில் கூறப்பட்டள்ளது. இது ஹொய்சளர் பற்றிய குறிப்பே எனத் தோன்றுகிறது. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி செய்த ஹொய்சள வீர வல்லாளனின் பட்டத்தரசி, சோழ இளவரசியாவாள்.


தாங்கள் கூறியதற்கும் இதற்கும் வேறுபாடு உள்ளதே.. தயவு செய்து எனக்கு ஆதாரத்துடன் விவரமாக கொடுக்க முடியுமா..

Tejaswininimburia said...

Among the velirs Irungovel/Irukkuvelir stands aloof. The war between Karikala and Irungovel is right to claim throne of Cholas. There was one convention that Velir had right for crowning only for Chera and Pandya kingdoms but not Chola kingdom. The Cholas had unique matrimonial alliances. They would always marry girls from vels of Nangur/Alundur/Kadambur/Pidavur which is similar to customs prevailing among Rajputs getting girls from immediate subordinate castes. Similarly the concept of getting crown from illustrious velir family(Even during Marata rule the crown will be brought from Anakudi Pillai near Vembarrur-Kumbakonam)like Rajputs. However after bitter battle between Karikala and Irungovel subsequent kings became powerful allies till Rajendrachola like Malaiyamans. The question is what was link between Irungovel and Cholas?Mayilai Seeni Venkataswamy identified Buti Vikramakesari as contemporary of Mamalla. Though belonging to Yadu why did Irungovels always opposed Pandiyas? The Sanskrit version of Irungovelir is Irungolas and common in Karnataka also. Irungovelir had Connection with Gokali Laguleesas and there are also their Kannada inscriptions .it is puzzling to note that Hoysalas became prominent simultaneously with the disappearance of Irungovels. Did Irungovels left for Karnataka after the death of Athirajendrachola and became Hoysalas? The word Vel or Bela is very common in North Karnataka. The peculiar aspect of early Karnataka kings is that they had two line of succession Jyeshta Irungola or elder or Muduraja or Yuvaraja or Irungovels or younger. The renadu Cholas had Dananjaya Muduraja who was sent to Senthalai which became Muttaraiyars. The stories connected with Irungovels (Hoysalas)creation of Sasangapura where a dove drove away an elephant is similar to Kozhiyur of Cholas. Probably they would have been clan of Cholas following matrilineal system and hence not blood cousins. The original word of Irukkuvelir (Pulirukkuvelur Vaitheeswarankoil) needs analysis.