ஜே.கே. ரித்திஷ் வளர்ந்த கதை!
‘‘டெல்லியில்பிரதமரைவிட நீங்கதான் பிஸியா இருக்கீங்க. போனமுறை கடனுக்குவந்து போனமாதிரிநியூஸைக் கொட்டிட்டு கிளம்பிட்டீங்களே. இனிமே நீங்கடெல்லி போகவேண்டாம்.நாங்க எங்க நிருபர்களை வெச்சு டெல்லியைப்பார்த்துக்கிறோம்...’’ என்றுபொறிந்து தள்ளிய நம்மை சின்ன புன்னகையோடுபார்த்தார் ரகசிய தெனாலி.‘‘அவசரமா கிளம்பினதுக்கு இவ்வளவு அர்ச்சனையா?‘வீரத் தளபதி’ ரித்திஷ்குமார்இப்ப டெல்லியில்தானே இருக்கார். சென்னையில்எனக்கென்ன வேலை. அவரைப் பற்றியகதை உங்களுக்கு வேணாமா?’’ பலவீனம் தெரிந்து அடிப்பதில் ரகசியதெனாலி கில்லி. நம் கோபத்துக்குகுளிர்ச்சியாக, ரித்திஷின் கதையோடுவந்தவருக்கு ராஜமரியாதைதரவேண்டியதாகிவிட்டது.
‘‘பாரம்பரியம்மிக்கம் தி.மு.க. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன்ரித்திஷைசோனியாவே ஆச்சர்யமாக பார்த்த கதையை பத்திரிக்கையில்படிச்சிருக்கலாம். கண்கூசுகிற மேக்கப்பில் நாடாளுமன்றத்தில் நுழைந்தரித்திஷை சீனியர் எம்.பி.கள்மிரட்சியாக பார்த்தனர். ராம்விலாஸ் பாஸ்வான்போன்ற இந்திய தலைவர்கள்மண்ணைக் கவ்விய இந்திய நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிட்டு வெற்றியும் பெற்றரித்திஷை சாதனையாளர் என்றே சொல்லலாம்.‘கோமாளி’ இமேஜ் வைத்தே தனக்கு ஆகவேண்டியதை சாதித்து கொள்ளும் முகவைகுமார் என்கிற ஜே.கே. ரித்திஷின் பெரியபலம் பணம். அனில் அம்பானி, விஜய்மல்லையா போன்ற பணத்தில் செழிக்கும் பெரும்முதலாளிகளே மக்களைவை தேர்தலில்போட்டியிட பயந்து மாநிலங்களவை உறுப்பினராகஆனார்கள். ஆனால் நம்ம ஜே.கே.பணத்தை வைத்து, மக்களவை உறுப்பினராகி மத்தியஅமைச்சர் ஆகிற கனவிலும்இருந்தார்.
அமைச்சர் கனவு கொஞ்சம்தள்ளிப்போயிருக்கிறது’’ என்ற ரகசியதெனாலியிடம், ‘நிகழ்காலம் எங்களுக்கேதெரியும். முகவை குமாருடைய கடந்தகாலம் சொல்லுங்க’ என்று ஆர்வத்தைவெளிப்படுத்தினோம்.
‘நதிமூலம்தெரிஞ்சாலும் ரிஷி மூலம் தெரியாது’னு சொல்லுவாங்க. ரித்திஷ்மூலமும்அப்படிதான். புரியாத புதிரா எல்லாருக்கும் இருக்கிற விஷயம்.உறுதியானதகவல்கள் கிடைக்க மலேசியா வரைக்கும் போக வேண்டியதாகி போச்சு.உங்கஆர்வத்துக்கும் அவசரத்துக்கும் உடனடியா தீனி போட முடியலை.தெனாலிவாசகர்களுக்கு இந்தக் கதையை எக்ஸ்குளுசிவா கொடுத்துடுங்க’’என்றுஅட்டகாசமாக ஆரம்பித்தார் ரகசிய தெனாலி.
‘‘பாரம்பரியமானதி.மு.க. குடும்பமாக இருந்தாலும் முகவை குமார்இராமநாதபுரத்தில் அன்றாடம்காய்ச்சியாகதான் இருந்தார். தூரத்து சொந்தமானதாத்தா சுப. தங்கவேலன்தி.மு.க. கட்சியின் மாவட்ட செயலாளராகவும், மாநிலஅமைச்சராகவும் சக்திவாய்ந்த நபராக இருந்தாலும் முகவை குமாருக்கும்தூரத்து சொந்தமானதாத்தாவுக்கும் தொடர்பு கிடையாது.
சொந்த ஊரில் பஸ்ஸுக்குகாசில்லாமல்நடந்துபோன கதையெல்லாம் முகவை குமாருக்கு உண்டு. வறுமை விரட்டசென்னையில்போய் ஏதாவது பிழைப்பு நடத்தலாம் என்று இராமநாதபுரத்திலிருந்துபஸ்ஏறியவருக்கு கோடம்பாக்கம் அடைக்கலம் கொடுத்தது.
ஊரிலிருந்துசினிமாவுக்காககோடம்பாக்கம் வந்த நண்பர்களிடம் தஞ்சம் புகுந்த குமாருக்கு,‘எந்த வேலைசெய்வது’ என்கிற குழப்பத்திலேயே காலம் வேகமாக சுழன்றது. மலேசியா,சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் செட்டிலானதமிழர்கள் தாயகம்வந்தால், அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் ‘ஷுட்டிங்’வேடிக்கைப் பார்ப்பதுதவறாமல் இடம்பெறும். திரையில் பார்த்தநட்சத்திரங்களை நேரில் எப்படியாவதுசந்தித்து ஒரு புகைப்படம்எடுத்துக்கொள்ள பெரிய தொகையையே செலவு செய்வார்கள்வெளிநாடு வாழ்தமிழர்கள்.
இந்த ஆசையில் சென்னைக்கு வருகிறவர்களை நோக்கிவலையோடுகாத்திருக்கிறது ஒரு கும்பல். சென்னைக்குள் ஷுட்டிங் எங்குநடக்கிறதுஎனும் விவரங்களைத் தெரிந்துகொண்டு வெளிநாட்டு தமிழர்களை அங்குஅழைத்துச்செல்வதற்கு பெரிய பணத்தை கறந்து விடுவார்கள். நட்சத்திரங்களுடன்ஒருபோட்டோ எடுத்துக்கொள்ள ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கதயாராகஇருக்கிறவர்கள் இருப்பதால் தொழில் அமோகமாக நடைபெறுகிறது. சினிமாவாய்ப்பு தேடி கிடைக்காமல் போனவர்களில் சிலர் இந்த வேலையையேமுழுநேரமாகசெய்யத் தொடங்கிவிட்டனர்.
முகவை குமாருக்கும் இதே வேலைமுழுநேரமானது.ஊரிலிருந்த தி.மு.க தொடர்பு மற்றும் தூரத்து சொந்தமானதாத்தா சுப.தங்கவேலனின் பேரும் முகவை குமாருக்கு பெரிய அளவில்கைக்கொடுத்தது. தி.மு.க.கட்சியில் அப்போது தீவிரமாக ஈடுபட்ட சரத் குமார்,இப்போதைய மத்திய அமைச்சர்நெப்போலியன், தியாகு, வாகை சந்திரசேகர் போன்றநடிகர்களைக் கட்சியின் பெயர்சொல்லி, முகவை குமாரால் எளிதில் அணுகமுடிந்தது.
தாத்தா மாநில அமைச்சர்என்பதும் மிகப்பெரிய பலமாக இருந்துதட்டிய கதவெல்லம் திறந்தது. பெரியஉழைப்பில்லாமல் வாழ்வதற்குத் தேவையானபணத்தை சம்பாதிக்க இந்த தொழில்நன்றாகவே கைக்கொடுத்தது. இந்த நிலையில்தாத்தாவுடனான உறவைவளர்த்துக்கொள்ளும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினார்முகவை குமார்.
சென்னைக்குவரும் வெளிநாடுவாழ் தமிழர்கள் சினிமா மீது பைத்தியமாகஇருக்கின்றனர் என்பதைநேரில் பார்த்த முகவை குமாருக்கு சினிமா ஆசைஅரும்பியது. சினிமாவில்இருப்பவர்களுக்கு அரசியல் ஆசை இருப்பதைக் கண்டுஅரசியலிலும் தன்னைஅடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீவிரமானார்.
காலம்கைக்கூடி வரும் என்பதற்கு சாட்சியாக மலேசிய பிரதமருக்கு மிகநெருக்கமானஇருந்த ஒரு தமிழர் சென்னைக்கு வந்தார். மலேசிய அரசாங்கத்தில்மிகுந்தசெல்வாக்கு உடைய அவருடைய குடும்பத்தினருக்கு சினிமா ஆர்வம்அதிகம். திரைநட்சத்திரங்களை நேரில் பார்ப்பதற்காக எட்டு வருடத்திற்குமுன்பு சென்னையில்ஒரு வார காலம் முகாமிட்டது மலேசிய முக்கிய பிரமுகரின்குடும்பம். அப்போதுசரத்குமார் கொஞ்சம் பரபரப்பான நடிகாரகவும் இருந்தார்.
அந்த நேரத்தில்சரத்குமார் உள்ளிட்ட சிலரை சந்திக்க வைத்ததோடு, திரைநட்சத்திரங்களோடுஉணவருந்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தார். மலேசியபிரதமருக்குநெருக்கமானவர் என்பதால் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்துகவனித்த முகவைகுமாருக்கு அடுத்த அதிர்ஷ்டம் அப்போதே அடித்தது. முக்கியபிரமுகரின் கடைசி மகனுக்கு கால் இடறி எலும்பு முறிவு ஏற்பட்டதுசுவாரஸ்யமானகதையின் அடுத்த திருப்பம்.
மேலும் ஒரு வார காலம் தன்னுடையபயணத்தைநீட்டிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் மலேசிய பிரமுகர். எல்லாவேலையையும்விட்டுவிட்டு கால்முறிவு சிறுவனுக்கு முழுநேர கவலாக இருந்துஅக்கறையோடுபார்த்துக்கொண்டார் முகவை குமார்.
அப்போது முக்கியபிரமுகருக்கும்குமாருக்கும் நெருக்கம் அதிகரித்தது. தனக்காகவும்,தன்குடும்பத்துக்காகவும் கடுமையாக உழைக்கிற குமாருக்கு கைமாறாக ஏதாவதுசெய்யவேண்டும் என்ற நினைப்பு விதையாக பிரமுகர் மனதில் விழுந்தது. கைமாறுசர்க்கரையாக மாறி முகவை குமார் வாழ்க்கையில் பெரிய வசந்தத்தைஏற்படுத்தியதுஎன்கிறார்கள் அவரின் அடிப்பொடிகள்.
இந்தியாவிலிருந்துமலேசியாவுக்கு 200டன் சர்க்கரையை இறக்குமதி செய்யும் பொறுப்பு முக்கியபிரமுகரிடம் வந்துசேர்ந்தது. உதவிக்குக் கைமாறாக சர்கரையை இறக்குமதிசெய்கிற வேலை முகவைகுமார் மூலமாக நடைபெற்று கணிசமான தொகையைப் பரிசாகப்பெற்றார் முகவை குமார்.அதுவரை அன்றாடம் காய்ச்சியாக வாழ்வைநகர்த்தியவருக்கு சொகுசு வாசலுக்கேவந்தது.
ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தைத் தொடுவதற்காக காலம்கனிந்த ஒரு நேரத்தில்தனக்கு கிடைத்தப் பணத்தை முதலீடா போட்டு பல இடங்களில்இடங்களை வளைத்தார்முகவை குமார். ஒரு ரூபாய் போட்டால் ஆயிரம் ரூபாய்கிடைக்கிற பணம்காய்க்கும் மரமாக ரியல் எஸ்டேட் தொழில் ராக்கெட் வேகத்தில்சீறிபாய்ந்தது. தன்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணம்புரளஆரம்பித்தபோது சினிமா ஆசையை நிறைவேற்ற ஹீரோவாக நடிக்கும்முடிவைஎடுத்தார் முகவை குமார்.
முகவைகுமார் நடிக்கும்’னு போஸ்டர் அடிக்கிறது கஷ்டம் அண்ணே’னு என்றுஉடன்இருந்தவர்கள் சொல்ல முகவை குமார் என்கிற ஜே.கே. ரித்திஷ்குமாராகஅவதாரம்எடுத்து அளப்பறைகளை கொடுத்தார் ரித்திஷ். வீட்டின் உள்அறையிலிருந்துஇன்னொரு அறைக்கு நுழையும்போது, ‘அண்ணன் அவர்களை வருகவருகவென்றுவரவேற்கிறோம்’ என்று போஸ்டர் அடிக்க வேண்டும் என்று ஆசைப்படஆரம்பித்தார்.
காசு இருந்தால் கேரோ செய்யும் காக்காய் கூட்டத்திற்குசகலமும் ரித்திஷ்தான்செய்தாக வேண்டும். போஸ்டர் அடிக்க ஆகும் செலவையும்ஏற்று, கூடுதலாககூலியும் கொடுத்த அண்ணன் ரித்திஷ் ‘வீரத்தளபதி’ என்றபட்டங்களை சுமக்கஆரம்பித்தார். ரித்திஷ் ஆட்டோ ஸ்டேன்ட்கள் வடபழனிஏரிக்களில் திடீர்திடீரென் முளைத்து எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தன. சென்னையின்கோடம்பாக்கத்திலிருந்து வடபழனி வந்தாலோ,வடபழனியிலிருந்து கோடம்பாக்கம்போனாலோ வரவேற்பு பேனர்கள் கண்னை கூசஆரம்பித்தன.
இன்னொருஅதிர்ஷ்டம் கூரையைப் பிச்சுகிட்டு கொட்ட ஆரம்பித்தது.மலேசியநாட்டிலிருந்து நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளைத் தொடங்ககட்டிடங்கள்கட்டும் முன்வந்தன. அதற்கான ஆர்டரை டி.எல்.எஃப் நிறுவனம்பெற்றது. ரியல்எஸ்டேட் தொழிலில் இந்தியாவின் பெரிய நிறுவனமான டி.எல்.எஃப்நிறுவனம்சென்னையில் கே.கே. ரித்திஷை வைத்து நிலங்களைத் தேடியது.தன்னிடம்கைவசமிருந்த நிலங்களை பெரிய தொகைக்கு ஜே.கே. ரித்திஷ் விற்றதாகதெரிகிறது.
ஜே.கே. ரித்திஷ் என்கிற வள்ளல் பிறந்த இடம் அதுதான்.அள்ளிக்கொடுக்கும்அதிர்ஷ்ட்டதில் கொஞ்சம் கிள்ளி கொடுக்க தொடங்கியவரைஎல்லோரும் வாய்விட்டுபுகழ்ந்தார்கள். ‘நாங்க பாரம்பரியமா வள்ளல் பரம்பரை’என்ற பரம்பரை புகழைச்சொல்லி, பார்க்கிற எல்லோருக்கும் நூறு ரூபாய்நோட்டும், ஆயிரம் ரூபாய்நோட்டும் அள்ளி வீசினார். ‘ஐயா தர்ம பிரபுவே’என்று யாராவது கையைநீட்டினால் நூறு ரூபாய் நோட்டில் காந்தி சிரிப்பார்.‘ஐயா வள்ளல் மகராசனே’என்று கூறினால் ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்திசிரிப்பார். காசு கொடுத்தேபிரபலமான ரித்திஷை, ‘எப்படி சம்பாதிச்சாலும்எல்லாருக்கும் கொடுக்கிறாரே’என்று பாஸிட்டிவாக பார்த்தனர்.
கலவரமானவிளம்பரங்களில் ரித்திஷ் மிரளவைத்தாலும், பணத்தை வாரி இறைத்து எல்லோரையும்அசர வைத்தார். ஷுட்டிங்க்நடக்கும் நேரத்தில் ‘லைட் மேன்’ சம்பளம் 400ரூபாய் என்றால், ரித்திஷ்ஆஜரான நாளில் 1,400 ரூபாய் சம்பளம். எத்தனை பேர்வேலை செய்கிறார்கள் என்றுகேட்டு, யூனிட்டுக்கே ஆயிரம் ரூபாய் நோட்டுகளைபறக்க விட்டார்.
‘ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் கண்டெய்னரில்ஒன்றை லபக்கி இப்படிவள்ளலாகி இருக்கிறார்’ எனும் வதந்திகளை ரித்திஷ்காதுகொடுத்தும்கேட்கவில்லை. ‘வித்தியாச கெட்டப்’ என்று இரண்டு பக்கபேட்டிக்குநிருபர்கள் வந்தால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் வரைகாஸ்டியூம்க்குசெலவழித்தார் நாயகன். படம் ரிலீஸான நாளில் இருந்துபிரியாணியும் கொடுத்து,படம் பார்த்தால் நூறு ரூபாய் என்று பணமும் கொடுத்தேதன் படத்தை நூறு நாள்ஓட்டிய பெருமை தமிழ் சினிமா வரலாற்றில் ரித்திஷையேசேரும். எந்தவிமர்சனத்தையும் சிரித்துக்கொண்டே ரசிப்பது அவருடைய இன்னொருப்ளஸ்.
சினிமாநட்சத்திரங்களை வேடிக்கைக் காட்ட மற்றவர்களை அழைத்துபோனமுகவை குமார்,ஜே.கே. ரித்திஷாகி தானே நட்சத்திரமான கதையை அப்படியா ஒருசினிமாவாகஎடுக்கலாம். இன்னொருப்பக்கம் அடிமனதில் ஆழங்கொண்டிருந்தஅரசியல் ஆசைக்கு ஆதரவாக வந்துநின்றது நாடாளுமன்ற தேர்தல். அழகிரியின்ஆசிர்வாதத்தை தன் பணத்தினால்பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இவ்வளவுநாள் தன்தூரத்து தாத்தா என்று யாரைக்கைக்கட்டி கொண்டிருந்தாரோ அவரையே வீழ்த்திதி.மு.க.வில் சீட் வாங்கிய போதுகாமெடியனாக இருந்த ரித்திஷை எல்லோரும்சீரியஸாக பார்த்தனர். மாவட்ட செயலாளராகவும், மாநில அமைச்சராகவும்இருந்த சுப. தங்கவேலன்தன்னுடைய மகனுக்கு எம்.பி. சீட் வாங்கி விடுவதில்கங்கணம் கட்டிக்கொண்டுஇறங்கினார். தி.மு.க. கட்சியில் மாவட்ட செயலாளரைமீறி எம்.பி. சீட்வாங்கியதை எட்டாவது அதிசயமாகவே பார்க்கிறார்கள்.
‘உங்கதொகுதிக்கு நீங்களேசெலவு செஞ்சுக்குவீங்களா?’ என்று தி.மு.க. தலைமைகேட்டபோது, ‘பக்கதுலரெண்டு தொகுதியையும் நானே பார்த்துக்கிறேன்’ என்றுவெகுளித்தனமாக சொன்னதோசெய்து காட்டினார் ஜே.கே. அழகிரி எப்படியாவது தனக்குமத்திய அமைச்சர்பதவியை வாங்கிவிடுவார் என்று நம்பியவருக்கு சின்னதாகஇப்போது பின்னடைவு.‘அண்ணன் தகுதிக்கு வெறும் எம்.பி போதாது. மினிஸ்டர்ஆக்கணும்’ என்றுஅவரோடு எப்போது சுற்றியிருப்பவர்கள் உசுப்பேற்ற,‘மினிஸ்டருக்கு எவ்ளோசெலவாகும்’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்அல்டிமேட் நாயகன்.
அடுத்தவர்களுக்குஆச்சர்யமாக இருக்கும் அரசியலையும், சினிமாவையும்கைக்குள் கொண்டுவந்ததில்ரித்திஷ் குமாருக்கு கொஞ்சம் பெருமை இருக்கவேசெய்கிறது. எம்.பி.ஆகிவிட்டாதால், பழனி முருகன் கோவிலுக்கு சென்றுநேர்த்தி கடன் செலுத்திஅங்கு இருக்கும் எல்லா பஞ்சாமிர்த டப்பாக்களையும்அள்ளியிருக்கிறார்ரித்திஷ்.
சென்னையில் குடியிருக்கும் மிகப்பெரியஅப்பார்ட்மென்டான தோஷிகார்டனில் குடி இருப்பவர்கள் எல்லோரும் கடந்தவாரம்அதிகாலை கதவை திறந்துஅதிர்ந்து போயிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுவாசலிலும் பழனிபஞ்சாமிர்தத்தை வைத்திருக்கிறார் ரித்திஷ்.
‘கதவைதட்டியேகொடுத்திருக்கலாமே’ என்று சிலர் கூற மையமாக சிரித்திருக்கிறார்கலகலகாமெடி ஹீரொ. இதற்கு முன்பு திருப்பதிக்குப் போய் லட்டு வாங்கிவந்துஎல்லோருடைய வீட்டு வாசலிலும் வைத்தபோது பல லட்டுகளை திருப்பிஅனுப்பினர்குடியிருப்பவர்கள். இந்த முறை வைத்த பஞ்சாமிர்தத்தை திருப்பஅனுப்பமனமின்றி எல்லா வீடுகளிலும் எடுத்துக்கொண்டுள்ளனர்.
‘எம்.பி’க்குஇவ்ளோபவரா என்று சிலிர்த்துபோய் ரித்திஷ் சொன்ன போது, ‘ஆமாண்ணே’ என்றுஉடனேதலையசைத்தவருக்கு ஆன்&தி&ஸ்பாட் ஆயிரம் ரூபாய் லாட்டரிஅடித்தது. நாடாளுமன்றத்தில் கைத்தட்டும் எம்.பி.களுக்கு காந்திநோட்டைநீட்டிவிடுவாரோ என்று கொஞ்சம் பேர் பதறிப்போய் இருப்பதாக தகவல்’’என்றுகடகடவென்று ரித்தீஷ் மூலம் சொன்ன ரகசிய தெனாலியிடம் அடுத்த முறைசிலஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் ஆச்சர்யமில்லை!
thanks : thenaali.com
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
yen intha poraamai- vaazhnthaalum yesum- thaalnthaalum yesum ulagamthaaney- andraadam kaaichchi andru- indru kodutkka mudigirathey- vaazhththuvoem
Post a Comment