அச்சுத களப்பாளன்

அச்சுத களப்பாளன்
[1]

களப்பாளர் என்பது கள்ளர் குலத்தின் பட்டபெயர்களில் ஒன்றாகும்.
கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தின் மத்திய பகுதியில் களப்பிரர் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன். இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.thanks to wikipedia
[2]இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ
பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக்
கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த
யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடங்களை
மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்த மதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்

[3]  தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் 'களப்பிரர் காலம்' என்பது இருண்ட காலமாகக்
> கருதப்படுகிறது. இதைப் பற்றிய செய்தி கிடைக்காததால் ? இவர்கள் யார்

> ? எப்படி அதிகாரம் இவர்களுக்கு வந்தது? எவ்வளவு ஆண்டுகள் தமிழ் நாடு இவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது

> ? அப்போதைய இலக்கி ய,சமூக,அரசியல்

> வாழ்க்கை எப்படி இருந்தது? எவ்வாறு அது பழைய நிலைக்கு மீண்டது? அப்போது

> வெளிநாட்டுத் தொடர்பு எப்படி இருந்தது ? ஏதேனும் சிறு

> குறிப்புகளானும் உள்ளனவா? ராஜரங்கன்






அன்பிற்குரிய அரசரங்கருக்கு,

ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்"

என்ற நூலை விடியல் பதிப்பகம், (11, பெரியார்நகர், மசக்காளிப்பாளையம் வடக்கு, கோவை 641 5,
தொலைபேசி எண்: 0422-576772) திசம்பர் 2000-இல் மீண்டும் பதிப்பித்திருக்கிறது. அதைப் படியுங்கள்.






பொத்தகத்தில் இருந்து சில செய்திகளையும், என் புரிதலையும் இங்கு கொடுத்திருக்கிறேன்.

களப்பிரர்கள் 'களப்பாளர்கள்' என்றும் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் கன்னடநாட்டில் இருந்து வந்த வடுகர்கள்????????; கன்னட தேசத்தில் களபப்பு என்னும் நாட்டையாண்ட சிற்றரசர்கள்; இன்றையச் சிரவண பெலகொள என்ற கன்னடப் பகுதியே அன்றைய களப்பப்புப் பகுதியாகும்?????. (களபப்பாளர்கள்>களப்பாளர்கள்; களபப்பர்>களப்பர்>களப்ரர்)

களபப்பு நாட்டில் உள்ள சந்திரகிரி மலையில் தான் சந்திரகுப்த மோரியன் அரசைத் துறந்தபின் சமணத் துறவியாக இருந்து பின் வடக்கிருந்து உயிர்துறந்தான். கி.பி. 250 அளவில், களப்பப்பர் அரசு
குவலாளபுரம் (இன்றையக் கோலார்) வரை பரவியிருந்தது. களப்பப்பு நாட்டிற்குள் தான் நந்தி மலை இருந்தது. (இன்றைக்கு பெங்களூரில் இருந்து பெல்லாரி போகும் சாலையில் nandi hills இருக்கிறது. ஒரு முறை போய்வாருங்கள்.) நந்திமலைச் சாரலில் இருந்து தான் பாலாறு எழுகிறது.



சங்க காலம் தொட்டு கொங்கு மண்டலத்தில் நடந்த சண்டைகளே மிகுதி. அந்தக் காலக் கொங்கு மண்டலம்

இன்றையத் தமிழ்க் கொங்கு மண்டலத்தையும், கன்னட கொங்கர் நாட்டையும் (பின்னால் கங்கர் நாடு என்று

திரித்துக் கூறப் பட்டது) கன்னடக் கடம்பர் நாட்டையும் கொண்டது. கடம்பர்களும் கொங்கர்களும் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றனர். தமிழ அரசரும் கன்னட அரசரும் தங்கம் உள்ள கோலாருக்காகவும்,

காவிரியைத் தன்வயம் கொள்வதற்குமாகக் கொங்கு மண்டலத்தில் போட்ட சண்டைகள் மிகுதி. அன்றையப் பழங் கன்னடம் கொடுந்தமிழில் ஒரு வகையே! களப்பப்பு அரசர்கள் சங்க காலத்தில் கடம்பர்களுக்கும், கன்னடக்


கொங்கர்களுக்கும் கீழிருந்த சிற்றரசர்களே! களப்பப்ப அரசர்கள் ஏறத்தாழ கி.பி.250 -இல் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி தங்கள் நாட்டை விரிவு படுத்தி, ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்.
(தமிழக அரசர்கள் ஒருவருக்கொருவர் இந்தக் காலத்தில் அடிக்கடி ஒருவருக்கொருவர் போரிட்டுத் தங்களை
வலுவற்றவராய் ஆக்கிக் கொண்டது இவரைப் போன்றோர் தமிழகத்தைக் கைப்பற்றவாய்ப்பாக இருந்தது.) பல்லவ
நாடு மட்டும் தப்பித்தது. தமிழகத்தை ஆண்ட களப்பாளர்களின் கொடியில் வில், புலி, கயல் மூன்றுமே
இருந்தன. இவர்களின் அரசு தமிழகம் வரை விரிந்தபோது, தலைநகர் மதுரையாயிற்று. தில்லையிலும் ஒரு
கிளை அரசாண்டதை அறிகிறோம்.

அச்சுத விக்கந்தக் களப்பாளன் என்பவன் மிகவும் பேர்பெற்ற களப்பாள அரசன். அவனிடம் சேர, சோழ,

பாண்டிய மன்னர்கள் தளைப்பட்டுப் பாடியதாக 5 வெண்பாக்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கல விருத்தியுள்
மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. அச்சுதன் என்பது களப்பாளர்களின் பொதுப்பெயர்.எப்படிப் பாண்டியர்களுக்குச்
செழியன், வழுதி, மாறன் என்ற பெயர்கள்உண்டோ அது போல. களப்பிரர் தமிழகத்தில் நடத்திய ஆட்சிக்

காலத்தில் சமண வச்சிரநந்தியின் திரமிள சங்கம் ஏற்பட்டது. களப்பாளர்கள் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள்
தமிழகத்தை ஆண்டார்கள். (கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள பிணக்கு நெடுநாள் பட்டது; இருவரின்
வரலாறுகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை. ஒருவரை ஒதுக்கி இன்னொருவருக்கு வரலாறு சொல்லமுடியாது.

தமிழரை ஒதுக்கிச் சிங்களருக்கு எப்படிவரலாறு சொல்ல முடியாதோ அது போல.கன்னடர் ஊடுறுவாத தமிழக
அரசு கி.பி.250 ற்குப் பின் கிடையாது.)

அச்சுதர்கள் விண்ணெறிக்கும் சமண நெறிக்குமாக மாறி மாறிப் புகுந்திருக்கிறார்கள். அதே பொழுது,
பெரும்பாலும் சமண நெறியே உயர்ந்தோங்கி இருந்திருக்கிறது. நமக்குச் சமண நெறி பழக்கமானதே கன்னட
நாட்டின் வழியாகத்தான். சமண நெறிக்கு வெளியூர் அரசர்கள் ஆதரவு காட்டியதாலே, பின்னாளில்
சிவநெறியையும் விண்ணெறியையும் நிலை நாட்டப் புகுந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும், சமயக்குரவர்களூம்

தங்களின் தமிழ்மையையும் உள்ளூர்த் தன்மையையும் அழுத்திக் கூறி வெல்ல வேண்டி வந்தது.



பின்னாளில் களப்பாளர்களும் நாயன்மார் காலத்தில் சிவநெறிக்குச் சிலபோது ஆட்பட்டிருக்கிறார்கள்.

பாண்டிய நாட்டை ஆண்ட களப்பாள அரசனுக்குப் பிள்ளையில்லாமல் தான் மூர்த்தி நாயனார் யானையால்

தேர்ந்தெடுக்கப் பட்டுச் சிறிது காலம் மதுரையை ஆள்கிறார். பிறகு மீண்டும் களப்பாளர் தங்கள் ஆட்சியை

நிறுவுகின்றனர். சோழநாட்டை ஆண்ட களப்பாள அரசர்களில் கூற்றுவநாயனாரும் ஒருவர். சிவ ஞான போதத்தை
எழுதிய மெய்கண்டாரும் ஒரு களப்பாளரே.

கி.பி. 6ம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் களப்பாளரைத் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றுகிறான். இதே

காலத்தில் பல்லவ சிம்மவிஷ்ணு களப்பாளரைத் தோற்கடித்துச் சோழநாட்டைக் கைப்பற்றிக் கொள்ளுகிறான்.

பின் விசயாலயன் பல்லவரை வெல்லும் வரை சோழநாடு எழவே இல்லை. சேர நாட்டைக் களப்பாளரிடம் இருந்து

வென்ற அரசன் பெயர் தெரியவில்லை
http://www.treasurehouseofagathiyar.net/21600/21661.htm

[4]
களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை. திருக்குறளும் அவற்றில் ஒன்று
களப்பிரர் காலகட்டத்தைச் சேர்ந்த பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உதாரணம் சிதறால் மலை [குமரிமாவட்டம்] அப்பாண்டநாதர் கோயில் [ உளுந்தூர்பேட்டை] . அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு புதிய வரலாறு விரிவாக இனிமேல்தான் எழுதபப்டவேண்டும்

முனைவர் க.ப.அறவாணன் களப்பிரர் காலம் குறித்து சில முக்கியமான ஆய்வுகளைச் செய்திருக்கிறார். அவரது ‘களப்பிரர்காலம் பொற்காலம்’ என்ற நூல் முக்கியமான ஒன்று.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.  காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது.

 மதுரை முதல் புதுக்கோட்டை வரை இவர்கள் ஆண்டிருந்த நிலப்பகுதி என்றும் இப்பகுதியில் உள்ள பல ஊர்பெயர்கள் சாதிகளின் ஆசாரங்கள் ஆகியவற்ரைக் கோன்டு களப்பிரர் வரலாற்றை ஆராயலாம் என்றும் சொல்கிறார்கள்.
சைவர்களின் வெறுப்பு எவ்வாறு இருந்தது என்றால் களப்பிரர் காலகட்டத்தில் ஏராளமான நீதி நூல்கள் எழுதப்பட்டதற்குக் காரணம் அக்காலத்தில் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியால் நீதி வழுவி சமூகம் சீர்குலைந்ததுதான் என மீண்டும் மீன்டும் எழுதியிருக்கிறார்கள்! அப்படியானால் பக்தி காலகட்டத்தில் ஏன் அத்தனை பக்தி நூல்கள் எழுந்தன? பக்தி வழுவி நாத்திகம் மேலெழுந்தமையாலா? என்ன அபத்தமான பேச்சு!

ஆனால் அப்படித்தான் நம் ஆரம்பகால வரலாறு முற்றிலும் அடிபப்டைகள் இல்லாமல் எழுதப்பட்டது. அதற்குக் காரணம் அப்போது வரலாற்றை காலவரிசைப்படி எழுதுவது என்ற அளவிலேயே வரலாற்றெழுத்து நின்றுவிட்டிருந்தது. வரலாற்றின் கோட்பாடுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

இந்திய வரலாற்றாய்வில் முக்கியமான கோட்பாட்டு சட்டகங்கள் அக்காலகட்டத்தில்தான் முன்வைக்கபப்ட்டன. டி.டி.கோசாம்பியின் மரபு உருவாகி வந்தது.ஆனால் தமிழ்க அறிஞர்கள் அவற்றை எல்லாமறிந்திருந்தார்கள் என்பதற்கான தடையமே இல்லை

களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சமணம் செழித்தது. சமணம் பல்வேறு இனக்குழு மக்களை அகிம்சை வழியில் ஒன்றாகத் திரட்டிய மதம். தமிழ்நாட்டில் நாக வழிபாடு அதிகமாக இருந்திருக்கலாம். ஆகவே ஐந்துதலை நாகம் தலைக்குமேல் நிற்கும் தீர்த்தங்காரரான பார்ஸ்வநாதர் இங்கே சமணர்களால் முன்னிறுத்தப்பட்டார். மக்கள் அதிகமாக அவரையே வழிபட்டிருக்கிறார்கள்.

சம்ணம் மருத்துவம், கல்வி ஆகிய இரு வழிகளில் மக்களிடம் சென்றடைந்தது. ஆகவே மருத்துவநூல்கள், நீதிநூல்கள், இலக்கணநூல்கள் ஆகியவையே அவர்களால் அதிகமும் எழுதபப்ட்டன. தமிழகத்தில் கல்வி பரவலாக அவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். சித்த மருத்துவத்தின் பிதாமகர்கள் அவர்களே.
சமணம் வணிகத்தின், வணிகர்களின் மதமும் கூட. தமிழகத்தை ஒன்றிணைக்கவும் விரிவான வணிக வழிகளை உருவாக்கவும் அது உதவியது. இது தமிழகத்தின் பொருளியல் வளார்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது. பலநூற்றாண்டுக்காலம் தமிழ் பண்பாட்டின் முகமாக சமணமே விளங்கியது.
களப்பிரர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் இங்குள்ள மக்களுடன் ஐக்கியமாகிவிட்டிருக்கக் கூடும். தமிழ்கத்தில் உள்ள பலசாதிகள்களப்பிரர் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அவர்களின் வரலாற்றை நாம் இன்று தெளிவாக பகுப்பாய்வுசெய்ய முடியாது. நெடுங்காலம் ஆகிவிட்டது.
களப்பிரர்காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமான அரசியல்-பொருளியல்-பண்பாட்டுக்  கொடைகளை வழங்கியது என்றே நான் எண்ணுகிறேன். வரும்காலத்தில் விரிவான ஆய்வுகள் வழியாக இது மேலும் நிறுவப்படக்கூடும்
ஜெ http://www.jeyamohan.in/?p=4032
 [5]


தமிழகத்தைக் கி.பி. 250 முதல் 600 வரை களப்பிரர் அல்லது

களப்பாளர் ஆண்டனர். களப்பிரர் தமிழகத்திற்கு வந்த அயலவர்.

அவர்கள் கருநாடக தேசத்திலிருந்து தமிழகத்தில் புகுந்து

மூவேந்தர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றினர். கி.பி. ஆறாம்

நூற்றாண்டில் பல்லவர்களும், பாண்டியர்களும் அதிகார வலிமை

பெறும் வரை இவர்தம் ஆட்சி இருந்தது. இவர்கள் காலத்தில்

தமிழகத்து அரசியலிலும், சமயத்திலும், சமூகத்திலும், இலக்கியப்

பாடுபொருளிலும் மாறுதல்கள் ஏற்பட்டன.



''அளவரிய அதிராஜரை நீக்கி அகலிடத்தைக்


களப்பாள ரென்னும் கலியரசன்


கைக்கொண்டனன் ''


என்று வேள்விக்குடிச் சாசன வரிகள். அச்சுதக் களப்பாளன்

தமிழகத்தைக் கைப்பற்றியதைச் சொல்கின்றன.



ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விட்டுணு எனும்

பல்லவனும், பாண்டியன் கடுங்கோனும் களப்பாளரை வெற்றி

கொண்டனர். பல்லவர்களும் தமிழகத்திற்கு அயலவரே. ஆந்திர

தேசத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கும், வடபெண்ணை ஆற்றுக்கும்

இடையே ஆட்சியை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த பல்லவ

வம்சத்தினர் களப்பாளருடன் மோதித் தொண்டை மண்டலத்தைக்

கைப்பற்றினர். காஞ்சி அவர்தம் அரசிருக்கை ஆகியது.
http://www.tamilvu.org/courses/diploma/a041/a0412/html/a0412111.htm
[6] aஒரு சாரார் களப்பிரர் என்னும் பெயரே கள்வர் எனத் திரிந்ததாகும் எனக் கருதுகின்றனர். களப்பிரர் என்பார் தட்சிணத்தை ஆண்ட ஓர் அரச வமிசத்தினர். இவர்கள் ஒரு காலத்திற் பண்டி நாட்டையும் வென்று அடிப்படுத்திருக்கின்றனர்.
http://www.eegarai.net/-f17/-t583-70.htm
 

No comments: