நரசிங்கமுனையரையர்

“மெய்யடியான் நரசிங்கமுனையரையற் கடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.




தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்தமுனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரைவென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின்திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பண்ந்தார். சிவன்கோயிலின் சிவச்செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித்திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.

திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும்நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒருதிருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டுஅருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர்.

நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம்இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல்உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்;)கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.

நரசிங்கமுன்னையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில்தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில்பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால்நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலிற்கு இணங்கிநம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கிநம்பியை அளித்தார். நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரசதிருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர்பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்துமீளாத நிலைபெற்றனர்
thanks to http://kallarperavai.webs.com/apps/blog/entries/show/1996628-narasingha-muniyaraiya-nayanaar

Munayaraiyar (Muniaraiyar), Are Petty Cheifs From The Royal Kallar Clan, who were Ruling some parts of Tamilnadu during Different periods, One of the Famous King From this Clan is Narasinga Muniyaraiyar. The King Named Vanangamudi Muniaraiyar is mentioned in Tamil Copper Plate Inscriptions and Was also Mentioned By Ponniyin Selvan Written By Kalki.

Narasinga Muniaraiyar

Narasinga Muniaraiyar was the king of the stateThirumunaippadi where the great devotee Chunara Moorthy nayanar who takes very much pride in reiterating that he is the slave of the slaves of the Three eyed Lord. The king was not fond of filling the exchequer crushing the citizens, but fond of filling the heart with the wealth of the love on the Rich Matted haired Lord and his devotees that does not search for flaws. The valorous and victorious king, the slave of the Lord with the triheaded spear, went all the ways possible and useful in serving the Moon crowned Lord's holy nice abodes. The hurdles that come in the way got the hurdles but never was his services to the Companionless Single Lord stopped. He would not even bother for his life in the work of the Lord who wears charmingly the horn of the boar.


கோடாத நெறிவிளங்கும்
    குடிமரபின் அரசளித்து
மாடாக மணிகண்டர்
    திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்தில்
    சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளும் காவலனார்
    நரசிங்க முனையரையர்.


Ponniyin Selvan By Kalki

The King Named Vanangamudi Muniaraiyar is mentioned in Tamil Copper Plate Inscriptions Was also Mentioned by Kalki In his book Ponniyin Selvan, He mentioned that Vanangamudi Muniaraiyar was one of the Petty King is Comparable with Kings Like Paluvettaraiyar, Malavarayar (Malayaman), Sambuvarayar, these kings have held positions of power and influence under the Cholas and to have been related to the royal family by marriage.

Sentence Written Below are Taken from Kalki's Ponniyin Selvan

பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே வணங்காமுடி முனையரையர் வந்திருந்தார், மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்; தான் தொங்கிக் கலிங்கராயர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.

சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து அக்காலத்தில் வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.

அந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் பிறப்பினால் மட்டுமே 'அரசர்' பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீரர்கள் தாம் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் புகழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.

http://kallar.weebly.com/muniaraiyar.html

No comments: