கூற்றுவநாயனார்

கூற்றுவநாயனார் களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர்சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார்.அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக்கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்றுமாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும்பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழியஅரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.

மணிமுடிசூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குலமுதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணிமுடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச்சென்றுவிட்டனர்.

அதுகண்ட கூற்றனார் மனம் தளர்ந்து “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி,அந்நினைவுடன்துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர்கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சிபுரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர்.
thanks to http://kallarperavai.webs.com/apps/blog/entries/show/1996803-kootruva-nayanaar
[2]
சோழநாட்டை அரசாண்ட களப்பிர அரசர்களில் கூற்றுவனாரும் ஒருவர். இவரைக் கூற்றனார் என்றும்


கூற்றுவநாயனார் என்றும் கூறுவர். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில் அறிகிறோம்.

களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பழைய சோழ அரசர் பரம்பரையார் களப்பாளருக்கு கீழடங்கி இருந்தார்கள்.

அவர்களுடைய முன்னோரான சோழர் அணிந்திருந்த மணிமுடி தில்லை வாழ் அந்தணர்களிடத்தில் இருந்தது. 'முடி

ஒன்று ஒழிய அரசர் திருவெல்லாம்' உடையாராக இருந்த கூற்றுவ நாயனார் (இவரும் ஒரு களப்பாள அரசரே!)

சோழ அரசரின் முடியைத் தரித்து, அரசாளவேண்டும் என்று விரும்பினார். அவர் சோழ அரசருடைய முடியை

வைத்திருந்த தில்லைவாழ் அந்தணர்களை அணுகி அந்த முடியைக் கொண்டு தனக்கு முடிசூட்டும் படி கேட்டார்.

அவர்கள், 'சோழ அரசர் குடியில் பிறந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு முடிசூட்ட மாட்டோம்' என்று

சொல்லி, சோழர் முடியைத் தம்மில் ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும்

சேரநாட்டுக்குப் போய்விட்டார்கள்.

பெரிய புராணம் கூற்றுவநாயனார் புராணத்தில் இப்படி வருகிறது.

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்கு

தில்லை வாழந் தணர்தம்மை வேண்ட அவரும் 'செம்பியர்தம்


தொல்லை நீடும் குலமுதலோர்க் கன்றிக்கட்டோம் முடி' என்று

நல்கா ராகிச் சேரலந்தன் மலைநா டனைய நண்ணுவார்


ஒருமை உரிமை தில்லைவாழந் தணர்கள், தம்மில் ஒருகுடியைப்

பெருமை முடியை அருமைபுரிக் காவல் கொள்ளும் படி இருத்தி

இருமை மரபுத் தூயவர்தாம் சேரர் நாட்டில் எய்தியபின்

வரும் ஐ யுறவால் மனந்தளர்ந்து மன்றுள் ஆடும் கழல்பணிவார்

---------------------------------------------------------------------------------
thanks to http://www.treasurehouseofagathiyar.net/21700/21719.htm
[3]
செங்கற்பட்டு மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்தில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒரு சாராரும், தஞ்சாவூர் மாவட்டம் திருத்தருப்பூண்டி வட்டத்திலுள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும், கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சிவட்டத்திலுள்ள பெரிய களந்தை என்ற ஊரே களந்தை என்று மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். இவைகளின் வன்மை மென்மைகளை ஆராய்வாம்.




பொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டல சதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங் கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. 1 ஆதலால் இக்களத்தூர் திருவிசைப்பாப் பெற்ற கோயில் களந்தை ஆகாது.

கல்வெட்டு:

நாகை மாவட்டம் திருத்தருப்பூண்டி வட்டத்தில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி கோயில், கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்த பெருமாள்கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகிய நாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23ஆம் ஆண்டு 204ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திருஆதித் தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு. ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். `அந்தணர் அழலோம்பு அலைபுனல் களந்தை\' எனவும், \"குழையராய் வந்தென் குடிமுழு தாளுங் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே\" (தி.9 ப.9 பா.4) எனவும் திருக்களந்தை யாதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும், இறைவரின் திருப்பெயர் அழகர் (அழகியநாதசுவாமி) என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள் இராஜேந்திர சோழவள நாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றன. ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தெரிவிக் கின்றன. இறைவர்க்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது. `அந்தணீர்க் களந்தை\' `அலைபுனற் களந்தை\' எனத் திருவிசைப் பாவில் வருவதால், இக் களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப் படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர் முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடைய தால் நீர்வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக் களப்பாள் என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். பெரிய களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. 1 அவைகளுள் ஒன்று நீங்கலாக (எண் 169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன் திருப்பெயர் \"ஆதி புராணீஸ்வரம் உடைய நாயனார்\" என்றே குறிக்கப்பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார் என்று குறிக்கப்பட்டிருக் கிறது. இக் கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டு வந்து வைக்கப் பட்டதாகும். கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை தொடர்பற்ற கல் எனக் குறித்துள்ளனர். ஆதலின் இப்பெரிய களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று. இறைவரின் திருப்பெயர்: ஆதித்தேச்சுவரர்; அழகியநாத சுவாமி. இறைவியாரின் திருப்பெயர்: பிரபாநாயகி. வழிபாடாற்றியவர்: ஆதித்தசோழன், கூற்றுவநாயனார். இவ்வூரின் சிறப்பு: கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம் இக்களப்பாள் ஆகும். \"கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே\" என்பது திருத்தொண்டர் திருவந்தாதி. கல்வெட்டு வரலாறு: இவ்வூர்க் கோயில்களில் 12 கல்வெட்டுக்கள் (1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1902 Nos.656-663, -1925 Nos. 334-337 and S.I.I.Vol. VIII Nos. 261-268. ) இருக்கின்றன. இவைகளுள் அழகியநாத சுவாமி கோயிலின் இருகல்வெட்டுக்களின் மூலங்கள், தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் வெளி வந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகின்றேன். \"ஸ்வஸ்திஷ்ரீ கோமாறு பன்மர் திரிபுவனச் சக்ரவர்த்திகள் சிறிகுலசேகர தேவற்கு யாண்டு 23 24 ள் பங்குனி மீ களப்பாள் உடையார் திருவாதித்தீசுரமுடையாற்கு வரகூருடையார் பிள்ளை காடுவெட்டியார் மகனார் சொக்க நாயனார் கட்டின சந்தி ஒன்று.\" இவற்றால் களப்பாள் என்பது ஊரின்பெயர் என்பதும், ஆதித் தேச்சரம் என்பது கோயிலின் பெயர் என்பதும் புலப் படுகின்றன. thanks t o
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=279

No comments: